எதுவாக வேண்டும்
என்கிறாயோ அதுவாகிறாய்
கீதையிலே கண்ணன் சொன்னது !
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
விவிலியத்தில் சொல்லப்பட்டது !
வெள்ளத்தனையது மலர்நீட்டம்
உள்ளத்தனையது உயர்வு
வான்புகழ் வள்ளுவன் கருத்து !
கனவு காணுங்கள் நிறைவேறும்
அக்னிச் சிறகுகள் தந்த
அப்துல்கலாம் அறிவிப்பு !
பெரிதினும் பெரிதுகேள்
என்றான் பாரதி !
நினைப்பது நடக்கிறது
விதைப்பதே முளைக்கிறது!