ஓரத்து இருள்கண்டு
ஒடிந்து விடாமல் – தோழா
தூரத்து நட்சத்திரத்தை
கலங்கரை விளக்கமாய் ஆக்கிக் கொள்வோம்!
நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்
மலை மலையென
மலைத்து நில்லாமல் – தோழா
உளியெனும் ஆயுதத்தால்
உடைத்தெறியும் சூத்திரத்தை உணர்ந்து கொள்வோம்!
நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்
பள்ளத்தில் விழுந்தோமென
பதறிக் கிடக்காமல் – தோழா
உள்ளத்தின் ஊன்றுகோல் பிடித்து
உயர்வர தெரிந்து கொள்வோம்!
நாளை என்பது நம் கைபிடிக்குள்தான்